Showing posts with label chris nolan. Show all posts
Showing posts with label chris nolan. Show all posts

Saturday, September 18, 2010

Inception (2010)-4

இன்செப்ஷனோட இறுதிக் காட்சி பற்றி உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் பலவிதமான தியரிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சிலபேர் காப் நிஜமான உலகத்துக்கு திரும்பி அவனது பிள்ளைகளை சந்தித்தாக சொல்கிறார்கள். சிலபேர் அதுவும் ஒரு கனவுதான் என்கிறார்கள். இன்னும் சிலபேர் படம் முழுதும் காப்போட கனவுதான் என்கிறார்கள்.

படத்தை உற்று நோக்கும் போது சாய்டோவும், காப்பும் லிம்போவிலிருந்து எழும்பிவரும் சீனைத் தொடர்ந்து வரும் எல்லாக் காட்சிகளுமே ரசிகர்களின் யூகத்துக்கும், சுய சிந்தனைக்கும் விடப்பட்டுள்ளன. குறிப்பாக அதற்குப் பின்னால் வரும் எல்லாக் காட்சிகளிலும் உரையாடல்களே இடம்பெறவில்லை. காப் தொடர்ந்தும் கனவு காண்கிறானா? க்ரூப் மெம்பர்களும், குடும்பமும் விம்பங்கள் தானா? அல்லது அவன் நிஜமாகவே வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளானா? இந்தக் கேள்விகளெல்லாம் நோலனுக்குத் தான் வெளிச்சம். இருந்தாலும் ஒருசில ஆதாரங்களின் அடிப்படையில் அலசுவோம்.

Thursday, September 16, 2010

Inception (2010)-3

இன்செப்ஷன் தொடரின் க்ளைமேக்ஸை அலசும் நிலைக்கு கிட்டத்தட்ட நாம் தயாராகிவிட்டோம். அதற்கு முன் ஒரு கனவு வேட்டையை தனியா ஒரு ஆள் செய்ய முடியாது. அதுக்காகத் தான் படத்தில் இன்செப்ஷனுக்காக ஒரு டீமே திரட்டப்பட்டு ஒவ்வொருத்தருக்கும் சில பிரத்தியேகமான வேலைகள் கொடுக்கப்பட்டன. அந்த வேலைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
(திருடப்படப்போறவரை தற்காலிகமாக சப்ஜெக்ட் என எடுத்துக்கொள்வோம்)

1. பிரித்தெடுப்பவர் (Extractor)
கனவுகளிலிருந்து ஒரு சீக்ரெட்டை எப்படிப் பிரித்தெடுப்பது அல்லது ஒரு ஐடியாவை எப்படி விதைப்பது என்பது பற்றின அறிவு இருக்கவர்தான் இந்த வேலையை செய்யனும்.

Monday, August 30, 2010

Inception (2010)-2

இன்செப்ஸன் பற்றிய எனது தொடரின் 2வது பதிவு... இதோ
ரொம்ப சின்ன பதிவுதான் ஆனால் படம் பார்த்தவர்களுக்கு இந்த பதிவில் உள்ள காரணியின் முக்கியத்துவம் தெரியும்.
இத்தொடரில் இன்செப்ஸனில் உபயோகிக்கப்பட்ட புதுமையான பொருட்கள் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் சிறிது அலசுவோம்

இன்செப்ஷனில் ஏகப்பட்ட புதுமையான பொருட்கள் வருகின்றன. இருந்தாலும் அவற்றில் கதைக்கு மிக முக்கியமானவை டாட்டம்கள்(tottem). டாட்டம் எனப்படுவது நாம் இருப்பது கனவுலகத்திலா, நிஜ உலகத்திலா என அறிந்து கொள்ள எமக்கு உதவும் சிறு பொருளாகும். படத்தில் மொத்தம் 4 பேர் டாட்டம்கள் வைத்திருக்கினறனர்(மால் நீங்கலாக). ஒவ்வொருத்தரின் டாட்டமும் வித்தியாசமானது. அவரவர் டாட்டமை அவர்கள் மட்டுமே உபயோகப்படுத்துவர்.

Inception (2010)-1


இன்செப்ஷன்..... இந்த படத்துக்கும் தமிழ் படங்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒண்ணுதான்... தமிழ் படங்கள்ல நடிகர்கள் நாங்க பார்க்கனுமேங்கறதுக்க முழிச்சுகிட்டு நடிப்பாங்க.. பார்க்கற நான் தூங்கிடுவேன். ஆனா இதுல நடிகர்கள்லாம் தூங்கறாங்க.. என்னாலதான் கண்ணை சிமிட்டக் கூட முடியல...
அவ்வளவு பரபரப்பு.. அவ்வளவு விறுவிறுப்பு... படம் முடிஞ்சு போகறப்போ நாம இருக்கது ரியல் உலகத்துலயா? இல்ல கனவுலகத்திலயான்னு நமக்கே சந்தேகம் வந்துரும்.. அது தான் கிறிஸ்டோபர் நோலனின் final touch!

Related Posts with Thumbnails